முதல் வாள்!


ஹாஷிம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை. மக்காவில் அவர்களுக்கிருந்த செல்வாக்கும், புனித கஅபாவில் அவர்கள் நிலைநிறுத்தியிருந்த அதிகாரமும், ஆதிக்கமும் அவர்களைத் தடுத்திருக்கலாம்.

 


ஆனால் தங்கள் குடும்பத்தில் ஓர் அங்கம் என்ற அடிப்படையில் எதிரிகளின் கைகளில் அண்ணலாரை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. அண்ணலாரின் காரியத்தை எங்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்று அபூஜஹ்லும், இன்னபிற எதிரிகளும் கோரியபொழுது அபூதாலிப் அதனை உறுதியாக நிராகரித்தார். அவர்களிடம் அவர் முகத்திலடித்தாற்போல் இவ்வாறு கூறினார்:

 


“முஹம்மதைச் சுற்றி ஹாஷிம் குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம். உங்கள் வெட்டுகள் முழுவதும் பட்டு விழ வேண்டி வந்தாலும் நாங்கள் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்போம்.”

 


அபூதாலிப் இப்படியொரு நிலைப்பாடை எடுத்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் தந்திரமாக நடந்து கொள்ளவில்லையென்றால் பொதுமக்கள் தனக்கெதிராகத் திரும்பி விடுவார்கள் என்று அபூஜஹ்ல் அஞ்சினான். அவனுக்கு அனுகூலமான வாய்ப்புகள் வருவதற்காகக் காத்திருந்தான்.

 


இருந்தாலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கண்டபொழுதெல்லாம் பரிகாசம் செய்யவும், சிறிய அளவில் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவும் அவன் தயங்கிடவில்லை.

 


ஒரு நாள் மக்கள் கூடி நின்ற ஓர் இடத்தில் அபூஜஹ்ல் அண்ணலாரைக் கண்டதும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். முஸ்லிம்களில் ஒருவரான துலைப் இப்னு உமைர் (ரலி) இதனைக் கண்டார். பொறுக்க முடியாமல் ஓடி வந்து அபூஜஹ்லை பலம் கொண்ட மட்டும் தாக்கினார். அபூஜஹ்லின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடியது.

 


இதனைக் குடும்ப உதவியாக குறைஷிகள் காணவில்லை. அவர்கள் துலைபின் மேல் பாய்ந்தனர். இதனைக் கண்ட அபூலஹப் ஓடி வந்து துலைபுக்கு உதவியாக நின்றார். துலைப் அபூலஹபின் உறவினர். அண்ணலாரை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருந்தார் அபூலஹப். ஆனால் தன் உறவினர் என்ற அடிப்படையில் துலைபுக்கு உதவ முன்வந்தார்.

 


நிலைமை சிக்கலாவதைக் கண்ட அபூஜஹ்ல் உடனே தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினான். அந்தப் பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டான்.

 


தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திய இப்படிப்பட்ட காட்சிகள் நிறைந்ததாக இருந்தது அண்ணலாரின் மக்கா வாழ்க்கை.

 


ஒரு நாள் நகரத்தின் ஒரு மூலையில் அண்ணலார் அமர்ந்திருந்தபொழுது, ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவ்வழியாக வேகமாக வந்தார். சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஆரத் தழுவிய தைரியத்திற்குச் சொந்தக்காரர்.

 


ஸுபைரின் கையில் ஒரு வாள் இருந்தது. அண்ணலார் ஏன் அந்த வாளைக் கையில் வைத்திருக்கிறீர் என்று கேட்டார்கள்.

 


ஸுபைர் அந்த நிகழ்வை விவரித்தார். அவர் ஒரு நண்பகல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று தெருவில் சப்தம் கேட்டு விழித்தார். “முஹம்மதின் தொல்லை இன்றோடு தீர்ந்தது!” என்று யரோ ஒருவர் உரக்கக் கூறினார்.

 


இதனைக் கேட்டதும் ஸுபைர் பதறியடித்து வெளியே ஓடி வந்தார். ஆட்கள் ஆங்காங்கே கூடி பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். குறைஷிகளில் யாரோ ஒருவர் முஹம்மதைக் கொன்றுவிட்டாராம் என்று அவர்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தனர்.

 


ஸுபைருக்கு ஆவேசம் பொத்துக்கொண்டு வந்தது. வீதியிலிருந்து வேகமாக வீட்டுக்குள் ஓடினார். உறையிலிருந்து உருவினார் வா






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1

ஸலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான காலத்திலிருந்தே ஜெருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது. நெடுக நடைபெற்ற ஒவ்வொரு போருக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் சண்டைக்கும் சமாதானத்திற்கும் அந் நகரின் விடுதலைதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2

டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3

நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார்.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4

ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5

பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
7 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
8 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
9 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
10 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
11 சூஃபிக்களும் புனித போர்களும்
12 யார் தேச விரோதி?
13 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
14 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
15 விடுதலைப்போரில் வீரமங்கையர்
16 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
17 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
18 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
19 அந்த இரண்டணா ......
20 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
21 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
22 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
23 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
24 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
25 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
26 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
27 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
28 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
29 தமிழகத்தில் முஸ்லீம்கள்
30 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
31 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
32 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
33 பாடலியில் ஒரு புலி
34 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
35 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
36 முதல் சுதந்திரப் பிரகடனம்
37 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
38 காலித் பின் வலீத் (ரலி)
39 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
40 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
41 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
42 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
43 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
44 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
45 திருநெல்வேலி வரலாறு...!